உணவு விளையாட்டு, போராட்டம்: இறாலும், வாழ்வியலும்
An essay and recipe for Bittersweet prawns. Words by Rajkamal M, and photographs by Niranjana R and Palanikumar M. Translated from Tamil by Niranjana R.
Good morning and welcome to Cooking From Life: a Vittles mini-season on cooking and eating at home everyday.
All paid-subscribers have access to the back catalogue of paywalled articles. A subscription costs £5/month or £45 for a whole year. If you wish to receive the newsletter for free, or wish to access all paid articles, please click below. You can also follow Vittles on Twitter and Instagram. Thank you so much for your support!
Cooking from Life is a Vittles mini-season of essays that defy idealised versions of cooking – a window into how food and kitchen-life works for different people in different parts of the world. Cooking as refusals, heritage, messiness, routine.
Our nineteenth writer for Cooking from Life is Rajkamal M, whose essay has translated from Tamil by Niranjana R. You can read our archive of recipes and essays here.
உணவு விளையாட்டு, போராட்டம்: இறாலும், வாழ்வியலும்
An essay and recipe for Bittersweet prawns. Words and photographs by Rajkamal M.
(You can read the English translation of this essay, Eat, play, protest: A life with prawns, translated by Niranjana R here. This essay is part of Neidhal Kaimanam, an upcoming coastal community cookbook compiled by Niranjana and Bhagath Singh in collaboration with the fishing community on India's Coromandel Coast to be released in January 2024. For further information on it, please visit this website.)
சிறுவயதில் இறாக்கள், உணவாக மட்டுமல்ல எனக்கு விளையாட்டு நண்பனாகவும் இருந்திருக்கிறது. என் அம்மா இறாலை சுத்தம் செய்யும்போது அதில் ஒன்ட்றிரன்டை எடுத்து விளையாடிய நினைவு உண்டு. அவர்களுக்கு உதவி செய்வதாக எண்ணிக்கொண்டேன் போலும்.
பழவேற்காடு உவர்நீர் ஏரியில் இறாக்கள் பின்னோக்கி நீந்துவதை கண்டு மகிழ்ந்திருக்கிறேன். இந்த ஏரிக்கும் வரலாற்று சிறப்புமிக்க கலங்கரை விளக்கத்திற்கும் இடையே தான் எங்கள் வீடு அமைந்திருக்கிறது. எங்கள் ஊர் நீரால் சூழப்பட்டது. பழவேற்காடு ஏரியும் இந்திய பெருங்கடலும் மோதி ஒரு மணல் திட்டையும் அதைச்சுற்றி பிரமிக்க வைக்கும் ஒரு நீர்த்தடத்தையும் உருவாக்கி தந்தது; அதில் எங்கள் ஊர் சேர்த்து சுமார் 17 ஊர்கள் உள்ளன, அனைத்தும் மீன்பிடித் தொழிலை அல்லது எங்கள் ஊரைப்போல் குறிப்பாக இறால் பிடிக்கும் தொழிலை நம்பியுள்ளவை,
டச்சு காலனி காலகட்டத்தில் பழவேற்காடு என்ற பெயர் அவர்கள் வாயில் நுழையவில்லை என்பதற்காக புலிகாட் என்று அழைக்க ஆரம்பித்தனர்.
பழவேற்காடை சோழமண்டல கடற்கரை பகுதி மற்றும் சென்னை பகுதியுடன் இணைப்பதற்காக ஆங்கிலேயர்கள் ஒரு வழித்தடத்தை உருவாக்கினர். அவர்கள் ஒரு துறைமுகத்தையும் கட்டினர், உலக வனிகம் பெருக்குவதர்க்காக. இன்று சென்னையில் மூன்று துறைமுகங்கள் உள்ளன. ஆதில் ஒன்று தான் காட்டுப்பள்ளி துறைமுகம், 2008-ல் சென்னைக்கு அருகாமையில், பழவேர்காட்டிற்கு மிக அருகாமையில் கட்டப்பட்டது.
கல்வியை நோக்கி சென்றதால் நான் மீன்பிடி தொழில்கல்வியில் அரைகுறை தான். என் அப்பா அப்படி அல்ல. இறாலுக்கு வலையை புதைப்பதற்கு முன் நீரோட்டமும், காற்றும் எந்த திசையை நோக்கி இருக்கிறது மேலும் இறால் வெளிவரும் தருணம் அதற்கான நேரம் இவையெல்லாம் ஆய்வு செய்வார். பிறகு வலையையும், கொம்பையும் சேர்த்து கட்டிவிட்டு ஒரு ஒரு கொம்பாக கரையிலிருந்து பள்ளத்தை நோக்கி கட்டி கொண்டே வருவார் ஒரு ஏழு கொம்பு நட்டியவுடன் கழுதளவுக்கு பள்ளம் வந்துவிடும். அதன் பிறகு நேராக நட்டிய அந்த வலையை சுற்றி ஒரு சுற்று வலையை கட்டுவதற்கு ஒரு ஏழு கொம்பை நடுவார். அதில் வலையை மாட்டிவிட்டு வலையின் முனைகளை நீருக்குள் மூழ்கி புதைப்பார். இந்த ஏழு கொம்பை எதற்காக நேராக நட்டிநீர், இது ஏன் சுற்றி நடுகிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் சொல்லுவார், “நேராக நடும் வலையின் பெயர் தடுப்பு வலை. தண்ணி ஓட்டத்தில் இறாக்கள் கிழக்கு நோக்கி போகும், சில வடக்கை நோக்கி போகும். அதை தடுத்து நிறுத்தும் வலையை ஒட்டிக்கொண்டே பள்ளத்தில் சுற்றி வைத்திருக்கின்ற வலையில் இந்த இறால் போய் மாட்டிக்கொள்ளும்,” என்று. இறாக்கள் மாட்டும் தருணம் வரை நாம் காத்துக் கொண்டிருக்க வேண்டும். அந்த தருணம் வந்தவுடன் நம்முடைய வேகம் இறாவை விட அதிகமாக இருக்க வேண்டும் என்பார். தாமதப்படுத்தினால் வலைக்குள் இருந்து பல இறாக்கள் தப்பி ஓடும் என்பார். அப்படி வேகமாக செய்யும் போது சில நேரங்களில் கீழே ஆளி காலை கிழிக்கும்; மீனில் இருக்கும் முட்கள் கைகளிலும் கால்களிலும் குத்தும்.
பள்ளி முடிந்தவுடன் என் அப்பாவுடன் இறால் பிடிக்க படகில் சென்று விடுவேன். என் அப்பா இறால் பிடிப்பதற்கு தண்ணீரில் இறங்குவார் நான் படகில் இருந்து கொண்டே என் அப்பாவுக்கு தேவையான பொருள்களை வலைகளை, கம்புகளை, கயிறுகளை எடுத்து வீசுவேன். மார்பளவு, கழுத்தளவு தண்ணீர் இருக்கும்போது பிரச்சனை இல்லை ஆழமான பகுதியில் நீந்தி கொண்டு கம்புகளை நடுவதில் கொஞ்சம் கடினமான வேலையாக இருக்கும். மூச்சு பிடித்து நீரில் மூழ்கி கம்பை நட வேண்டும். படகில் இருந்து ஒரு மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவனாக அந்த வயதில் இதை பார்த்துக் கொண்டிருப்பேன். சில நேரங்களில் உள்ளே மூழ்கிய அப்பா மேலே வரவில்லை என்றால் ஒரு பதபதைப்பும், பயமும் வரும்.
இரவு நேரங்களில் குளிர் அதிகமாக எடுக்கும் போது நான் எடுத்துக் கொண்டு வந்த துணிகளை போர்த்தியும் குளிர் அடங்காமல் என் அப்பாவின் துணிகளையும் சேர்த்து போர்த்திக் கொள்வேன். அவர் வெறும் உடம்பில் படகில் கம்பீரமாக உட்கார்ந்து கொண்டிருப்பார். மழைக்காலங்களில் அது எனக்கு ஓர் நரக வேதனை அந்த திறந்தவெளியில் எங்கே போய் ஒதுங்குவது? அப்பொழுது போர்வைக்கு பதில் என் அப்பா சொல்லும் ஒழுக்க நெறி கதைகள், வள்ளலார் கதைகள் , பௌத்த கதைகள் சில நேரம் குளிரிலிருந்து விடுவிக்கும்.
இவ்வாறு நாட்கள் போகப்போக அந்த வாழ்க்கை முறையும் எனக்குள் இயல்பாக ஊடுருவ தொடங்கியது. நானும் வளர வளர படகில் இருந்து தண்ணீரில் இறங்கி அப்பாவின் தொழிலுக்கு மேலும் உறுதுணையாக மாறினேன். ஆனால் என் அப்பா அந்த தொழிலை எனக்கு முழுமையாகலாம் கற்றுத் தரவில்லை இதை முழுமையாக கற்றுக் கொண்டால் படிப்பில் கவனம் போய்விடும் தான் பட்ட கஷ்டங்கள் என் மகனும் படக்கூடாது வேறொரு வேலைக்கு போகட்டும் என்று வெறும் ஒத்தாசைக்கு மட்டுமே என்னை வைத்துக் கொண்டார் என்பதை நான் அறிவேன்.
இறாலுக்காக வலையை நட்டிவிட்டு காத்திருக்கும் நேரங்களில் நீச்சல் அடிக்க கற்றுக் கொடு என்று என் அப்பாவிடம் கேட்பேன். ஒரு நாள் படக்கில் இருந்து என்னை தூக்கி போட்டு விட்டார்! எப்படியாவது நீந்தி கரைக்கு வா அல்லது படகை பிடி என்றார். தத்தி தாவி கூச்சலிட்டு மூழ்கும் நேரத்தில் குதித்து காப்பாத்தினார். என் இடுப்பில் கயிறு கட்டி நீச்சல் பழக்க கத்துக் கொடுத்து இருக்கிறார் கையில் கம்பை ஊனி நீந்துவதற்கு கற்றுக் கொடுப்பார்.அதே சமயம் பல வித்தைகளையும் காட்டுவார். கையை கட்டிக் கொண்டு நீந்துவது, உள் நீச்சல் அடிப்பது, காக்கா நீச்சல் அடிப்பது என பலவிதமான நீச்சல்களை அடித்துக் காட்டுவார். எல்லாத்தையும் கற்றுக்கொடு கற்றுக்கொடு என்று அடம் பிடிப்பேன். ஒன்றை முறையாக கற்றுக்கொள் எல்லாம் வந்து விடும் என்பார். நேரம் வந்ததும் வலையை எடுப்போம்.
ஒரு ஐந்து கிலோக்கு மேல் 10 கிலோ க்கு மேல் இறாலை பிடித்து விட்டோம் என்றால் மகிழ்ச்சியாக வீடு திரும்வோம். அதற்கு குறைவாக பிடித்தோம் என்றால் மூஞ்சை தொங்க போட்டு கொண்டு வீடு திரும்புவோம். இப்படித்தான் ஒவ்வொரு நாளும் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது. ஆனால் இந்த வாழ்க்கை முறைக்கும் எங்களுக்கும் ஒரு ஆபத்து வந்து கொண்டிருப்பது எங்கள் மக்கள் யாருக்கும் தெரியாது.
கடலிலும், ஏரியிலும் பல வகை இறால்கள் உண்டு. பழவேற்காடு ஏரியில் குடாக்கல் என அழைக்க கூடிய ஆழமான சேற்றுப்பகுதியில் அது முட்டையிடும். அவற்றிலிருந்து ஒன்றரை - இரண்டு சென்டிமீட்டர் வளர கூடிய இறாக்களை செனாகுணி என்று அழைப்போம். அது வளர்ந்து செமக்கரா என்ற ஒரு வகை வெல்றா, கருப்பெறா மேலும் கொட்ரா என்ற பல வகையில் மாறும். 15 அல்லது 20 சென்டிமீட்டர் வளரக்கூடிய இறால்களை கோட்டரா என்று அழைப்போம். கடலில் சிவப்பு எறா, சிங்கியரா வெள்ளையரா, மோட்டாரா என்று சில வகைகள் உண்டு. இந்த வகை இறாக்கள் ஏரிகளில் பார்ப்பது கடினம். அங்கு அவை மனிதனுக்கான உணவு மட்டுமின்றி கடலில் வளரக்கூடிய பெரிய பெரிய மீன்களுக்கும் திமிகளுக்கும் இறையாய் மாறி விடுகிறது.
இறால் மட்டுமல்ல, நாங்களும் இந்த நெய்தல் மண்ணை விட்டு வேறு நிலப்பரப்புக்கு மாறினால் யாருக்கோ இரையாக தான் போகும் எங்கள் வாழ்க்கை. அந்த அளவிற்கு இறால், மீன், நண்டு என இவைகள் அனைத்தும் எங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்கின்றன. இதனால்தான், காட்டுப்பள்ளி துறைமுகத்திட்டத்தை எவ்வாறு எதிர்ப்பது என்று ஆலோசித்தபோது, எங்கள் பகுதி பெண்கள் பழவேற்காடு உணவு திருவிழா என்று ஒன்றை முன்னெடுத்து அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என அனைவரையும் அழைத்து விருந்து அளித்தனர். எங்கள் சுற்றுச்சூழலையும் எங்களையும் அழிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக்கொண்டனர்.
2008-ல் காட்டுப்பள்ளி துறைமுகம் ஒரு ‘சிரு துறைமுகம்’ எனவெ அங்கீகரிக்கப்பட்டிருந்தது. அதன் விளைவெ பெரிய அளவில் தான் இருந்தது. கடல் மண் அரிப்பும், பனை மரங்கள் சாய்வதும் என்கள் அருகிலேயே நிகழத் தொடங்கின. 2018-ல் இந்த துறைமுகத்தை அதானி என்கிற பன்னாட்டு நிறுவனம் வாங்கியது. துறைமுகத்தை 330 ஏக்கரிலிருந்து 6000 ஏக்கராக விரிவு செய்யும் திட்டத்தை முன்வைத்தது. எங்களை இரண்டு விதமான மக்களாக பிரித்தது – வளர்ச்சி என்னும் பொய்யான வாக்குறுதியை எதிர்க்கும் கூட்டமாகவும், மறுபுறம் வேலை வாய்ப்பு மேம்பாடு எனும் பேசும் கூட்டமாகவும் பிரிந்து கிடக்கின்றோம்.
காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கம் கடலில் 2000 ஏக்கருக்கு மணலை கொட்டுவது பழவேற்காடு கடற்கரையில் மணல் அரிப்பை உண்டாக்கும் முகத்துரத்தை அழிக்கும் பழவேற்காடு ஏரியை சேற்றுப்பகுதியாய் மாற்றும் மீன்கள் இறால்கள் நண்டுகள் எல்லாம் செத்து கரை ஒதுங்கும் நீர் நிலையம் காணாமல் போய்விடும் அது இங்கிருக்கின்ற கடல் வளங்களை சமூக பொருளாதாரத்தை பாழாக்கிவிடும் என்பதுதான் உண்மை.
மாற்றாக எங்களுக்கு இறால் பண்ணை வைத்து கொடுத்தால் அவற்றில் உபயோகப்படுத்தும் மருந்துகளாலும் உவர் நீராலும் நிலத்தடி நீர் நாசமாகும், அதனால் விவசாயமம் அழியும். எந்த கலப்படமும் இல்லாமல் கிடைக்கின்ற கடல் உணவு நாளை செயற்க்கையாக இந்த மக்கள் கைக்கு செல்லும். ஆகவே இந்த அதானி எதிர்ப்பு போராட்டத்தில் கடல் உணவு தான் எங்களுக்கு வலுவான கூட்டாளி
பழவேற்காடு பகுதியில், வடகிழக்கு பருவமழையின் போது, உவர் நீர் ஏரி பொங்கி, இறாக்கள் பலமடங்கு மிகையாகக் கிடைக்கும். இதனால் சந்தையில் விலை குரைவாவதால், 50-60 கிலோ இறாக்கள் வீடு திரும்பும். இவ்வாரு வீட்டிற்கு எடுத்து வந்த இறாக்களை நானும் எனது அப்பாவும் வலையில் இருந்து பேத்து கீழே கொட்டுவோம். எங்களுக்கு தேவையான இறாக்களை தேர்வு செய்வொம். அவை அம்மாவின் கைவண்ணத்தில் காலை இட்லிக்கு குழம்பாக மாறும். இரவில் உணவுக்கு வருவலாக மாறியது போல். இறாலில் வருவல், கிரேவி, இறால் பிரியாணி என்று மட்டுமல்லாமல் அதில் இறால் கட்லடும், இறால் வடையும் இறால் போண்டாவும் செய்ய முனைவோம். இறால் என்றாலே எங்களுக்கு எச்சி ஊறும், இதில் இவ்வளவு வகை என்றால் சொல்லவா வேண்டும். இதையும் மீரி எஞ்சும் இறாக்களை எங்கள் மொட்டை மாடிகளில் காயவைத்து அதை கருவாடாக்கி தலையை கிள்ளி மசாலாவுடன் சேர்த்து எண்ணெயில் பொறித்து சாப்பிடுவோம். இதோட ருசி மேர் சொன்ன எந்த வகை சமையலிலும் சேராது.
நான் இப்போது சென்னையில் வசிக்கிறேன், ஆனால் ஒவ்வொரு வாரமும் பழவேற்காடு சென்று, எனது 2 வயது குழந்தைக்கு கடல் உணவுகளை எடுத்துச் செல்வேன். இங்கு இந்த கோடையில் பருவமழை பெய்தது. நான் ஒரு மழை நாளில் என் பெற்றோரைப் பார்க்கச் சென்றேன், நினத்தது போல் என் அம்மா மொட்டை மாடியில் உலர்த்தும் இறால்களிலிருந்து காகங்களைத் துரத்திக்கொன்டிருந்தார். நான் என் மகனை அழைத்து வரவில்லயெ என வருந்தினேன். பரவாயில்லை, குனிந்து கைநிறைய இறால்களை எடுத்துக்கொண்டு, சமையல் அறை சென்று பொறிக்க முற்ப்பட்டேன், அன்று மதியம் மொட்டை மாடியில் காவலுக்கு நின்றபடி கொரிக்க.
காய்ந்த இறால் வறுவல் அ. தொக்கு
தேவையான பொருட்கள்:
1 கப் காய்ந்த இறால் (50g)
1 வெங்காயம்; 1 தக்காளி; 2 பச்சை மிளகாய்
½ தே. கரண்டி சோம்பு; ½ தே. கரண்டி சீரகம்
½ தே. கரண்டி மஞ்சள்தூள்
½ தே. கரண்டி இஞ்சி-பூண்டு விழுது
1 தே. கரண்டி மிளகாய் தூள்; 1 தே. கரண்டி மல்லித்தூள்
1 மே. கரண்டி எண்ணெய்; 1 தே. கரண்டி உப்பு
ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் சோம்பு, சீரகம் சேர்த்து பொரிந்தவுடன்,நறுக்கியவெங்காயம், பச்சை மிளகாய் சிறிது கருவேப்பலை சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து பிறகு தக்காளியும் சேர்த்து சிறிது மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு பிரட்டவும். அடுத்து மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கி விட்டு காய்ந்த இரவை சேர்த்துக்கொண்டு ஒரு மூன்று நிமிடம் வதக்கிய பிறகு தேவையெனில் சிறிது தண்ணீரை சேர்த்து கொதிக்க வைத்த பிறகு நமக்கு சுவையான காய்ந்த இறால் வறுவல் தயாராகிவிடும்.இதையே தண்ணீர் அதிகமாக சேர்த்து குறைந்த சூட்டில் சிறிது நேரம் கொதிக்க வைத்தால், இறால் தொக்கு ரெடி.
Credits
Rajkamal M is a filmmaker and social activist based in Chennai and Pazhaverkadu. He holds a Masters degree in Journalism & Mass Communication from Madras University, where he is now pursuing a PhD. He has written and directed several short films and is now making a feature length film as part of a Filmmakers’ Collective in Chennai. When he’s not making films, he organises young people in his town towards progressive environmental and social causes, which, for him, go together. At other times, he goes on deep dives into the history of Pazhaverkadu, its waterways and mangroves.
Niranjana R is a journalist turned urban geographer. Writing about the city of Chennai and its surrounds has been a big part of her work in both these roles. She is interested in the many lives lived around water in its myriad forms in the city – sea, river, marsh, lake, canal, groundwater and rainwater. Along with her colleague Bhagath Singh, she is putting together a coastal community cookbook in collaboration with fishers along the Coromandel coast. She teaches Geography at Queen Mary University of London.
Palanikumar M is an award winning photo journalist and visual ethnographer documenting land, labour and life amidst the waterways. He reports for PARI (People’s Archive of Rural India) and has trained young photographers which led to an exhibition titled North Chennai, Reframed in Chennai.
Vittles is edited by Rebecca May Johnson, Sharanya Deepak and Jonathan Nunn, and proofed and subedited by Sophie Whitehead. These recipes were tested by Joanna Jackson.
காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தை உறுதியாக எதிர்ப்போம்.மக்களை ஒருங்கிணைத்து.வெல்வோம்.
இறால் தொக்கு என்றவுடன் எனக்கு உமிழ் நீர் சுரக்கிறது! நல்ல செய்முறை விளக்கம். மேலும் இறால் பிடித்தலில் இத்தனை சிரமம் உள்ளது என்பதை இன்றே அறிகிறேன். பழவேற்காடு ஆக்கிரமிப்பு செய்யும் அதானியை, நாம் ஒன்றினைந்து எதிர்த்து விரட்டியடிப்போம்.